பிளஸ் 1 வகுப்புக்கு நாளை தேர்வு தொடக்கம்: தமிழகம், புதுச்சேரி மாணவர்கள் 8.85 லட்சம் பேர் எழுதுகின்றனர்

சென்னை: பிளஸ் 1 வகுப்புகளில் படித்து வரும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. இந்த தேர்வில்  தமிழகம், புதுச்சேரி பள்ளிகளில் படிக்கும் 8 லட்சத்து 85 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயங்கி வரும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வரும் பிளஸ் 1 மாணவ மாணவியருக்கான பொதுத் தேர்வு நாளை(10ம் தேதி) தொடங்குகிறது. இதில் மொத்தம் 8 லட்சத்து 85 ஆயிரத்து 53 மாணவ மாணவியர் தேர்வு எழுத தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். தமிழக பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 69 ஆயிரம் மாணவ மாணவியர் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 4 லட்சத்து 26 ஆயிரத்து 917 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 42 ஆயிரத்து 989 பேர் மாணவியர். மூன்றாம் பாலினத்தவர்கள் 2 பேரும் தேர்வு எழுத பதிவு செய்துள்ளனர். புதுச்சேரியில் இயங்கும் பள்ளிகளில் இருந்து 15 ஆயிரத்து 145 மாணவ மாணவியர் பதிவு செய்துள்ளனர். இவர்கள் தவிர பிளஸ் 1 தேர்வை தனித் தேர்வர்களாக தேர்வு எழுத 5 ஆயிரத்து 673 மாணவ -மாணவியர் பதிவு செய்துள்ளனர். மாற்றுத் திறனாளிகள் 5 ஆயிரத்து 299 பேர் பதிவு செய்துள்ளனர். சிறைவாசிகள் 99 பேரும் பதிவு செய்துள்ளனர். பள்ளி மாணவர்களுக்காக 3119 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தனித் தேர்வர்களுக்காக 115 தேர்வுமையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர சிறைத் தேர்வு மையங்கள் 9 அமைக்கப்பட்டுள்ளன. பிளஸ் 1 தேர்வு அறைக் கண்காணிப்பு பணியில் 47,315 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பறக்கும் படையினர் 3050 உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களில் அறிவியல் பாடத் தொகுதியின் கீழ்  மொத்தம் 5 லட்சத்து 50 ஆயிரத்து 186 மாணவ மாணவியரும், வணிகவியல்  பாடத் தொகுதியின் கீழ்  மொத்தம் 2 லட்சத்து 69  ஆயிரத்து 77 மாணவ மாணவியரும், கலை பாடத் தொகுதியின் கீழ் 15 ஆயிரத்து 362 மாணவ மாணவியரும், தொழில் கல்வி பாடத் தொகுதியின் கீழ் 50 ஆயிரத்து 428 மாணவ மாணவியரும் பதிவு செய்துள்ளனர்….

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி