பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணை மணந்தார் புதுவை இளைஞர்

புதுச்சேரி, ஜூன் 11: புதுச்சேரி முத்தியால்பேட்டை பொன்னுமாரியம்மன் கோயிலில் புதுவை இளைஞர் வெங்கட்ராம், பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண்ணை நேற்று காலை தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார். புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரபுராம், இவரது மனைவி ராஜகுமாரி. இவர்களுக்கு வெங்கட்ராம் என்ற மகன் உள்ளார். இவர் பி.டெக் பட்ட படிப்பை முடித்து, பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது இவர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கிலேசி பெத் சிம்பானன் ஓபா என்பவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரின் காதலுக்கும் பெற்றோர்கள் பச்சைக்கொடி காட்டவே, திருமணத்தை தமிழர் பாரம்பரிய முறையில் முறைப்படி செய்ய முடிவு செய்தனர்.

இதையடுத்து இரு வீட்டார் முன்னிலையில் புதுச்சேரி முத்தியால்பேட்டை பொன்னுமாரியம்மன் கோயிலில் நேற்று காலை தமிழ் முறைப்படி ெவங்கட்ராம்- கிலேசி பெத் சிம்பானன் ஓபா திருமணம் நடந்தது. இதில் தமிழ் பாரம்பரிய முறைப்படி மணமகன் பட்டு வேட்டி- சட்டையும், மணமகள் கூரைப்புடவையும் அணிந்திருந்தனர். மகளின் பெற்றோர் மற்றும் சில உறவினர்கள் இந்த திருமணத்தில் நேரடியாக கலந்துகொண்டு வாழ்த்திய நிலையில் மற்ற உறவினர்கள் யூடியூப் மூலமாக நேரடி ஒளிபரப்பில் திருமணத்தை கண்டு களித்தனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்