பிற்படுத்தப்பட்டவர்கள் சலுகை பெற ஆண்டு வருமானம் ரூ.1 லட்சமாக உயர்வு

சென்னை: பிற்படுத்தப்பட்டவர்கள் சலுகை பெற ஆண்டு வருமானம் ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் கார்த்திக் வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது: 2021-22ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் ‘இலவச மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம், இலவச பித்தளை தேய்ப்பு பெட்டி மற்றும் இலவச வீட்டுமனை வழங்கும் திட்டங்களுக்கான வருமான வரம்பு ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த மின்மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரம், பித்தளை தேய்ப்பு பெட்டி, வீட்டுமனை பட்டா திட்டங்களுக்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்படுகிறது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை