பிரேசிலில் போதை பொருள் கும்பல் 11 பேர் சுட்டுக் கொலை

ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் போதைப்பொருள் கும்பலுக்கும், காவல்துறையினருக்கும் இடையே நடந்த மோதலில் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில், போதைப்பொருள் கும்பல் ரகசியமான இடத்தில் செயல்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து ஹெலிகாப்டர் உதவியுடன் போலீஸ் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அதிரடி தாக்குதலை நடத்தினர். விலா குரூசிரோ என்ற இடத்தில் மறைந்திருந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள், காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு மற்றும் கையெறி குண்டுகளை வீசினர். அத்தகைய சூழ்நிலையில், காவல்துறையும் பதிலடி கொடுத்தது. இரு தரப்பிலிருந்தும் கடுமையான துப்பாக்கிச் சூடு நடந்தது. அதிகாலை நான்கு மணி முதல் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் போதைப் பொருள் கும்பலைச் சேர்ந்த 11 பேரை போலீசார் சுட்டுக் கொன்றனர். காவல்துறைக்கும், போதைப்பொருள் கும்பலுக்கும் இடையே நடந்த மோதலில், பெண் ஒருவர்  சிக்கி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன….

Related posts

காஷ்மீர் விவகாரத்தில் வன்முறை பற்றி பாக். பேசுவது அப்பட்டமான பாசாங்குத்தனம்: ஐநாவில் இந்தியா பதிலடி

அமெரிக்காவில் புயல் தாக்கி 52 பேர் பலி

பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டார்: ஈரான், ஈராக் இரங்கல்; மத்திய கிழக்கில் போர் தீவிரம்