பிரிவு உபச்சார விழாவை தவிர்த்தார் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி: சாலை மார்க்கமாக கொல்கத்தாவிற்கு பயணம்..!

சென்னை: மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, பிரிவு உபச்சார விழாவை தவிர்த்தார். உச்ச நீதிமன்ற கொலீஜியம், மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு சென்னை தலைமை நீதிபதியாக சஞ்ஜீப் பானர்ஜியை இடமாற்றம் செய்ய ஒன்றிய அரசிடம் பரிந்துரை செய்தது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இருந்த சஞ்ஜீப் பானர்ஜி பணியிட மாற்றம் செய்ய குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருக்கும் நிலையில், அவர் மேகாலையா உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். முன்னதாக, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக செயல்பட்டு வந்த சஞ்ஜீப் பானர்ஜியை இடமாற்றம் செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்ற கொலீஜியத்திற்கு மூத்த வழக்கறிஞர்கள் கடிதம் எழுதினர்.  அவர்கள் எழுதிய அந்த கடிதத்தில், பெரிய நீதிமன்றங்களில் அதிக வழக்குகளை திறம்பட கையாண்ட அனுபவம் கொண்ட சஞ்ஜீப் பானர்ஜியை மேகாலயா போன்ற சிறிய மாநில உயர்நீதிமன்றங்களில் அவரது அனுபவம் முழுமையாக பயன்படாது. எனவே, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜியை இடமாற்றம் செய்யும் முடிவை கைவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். ஏற்கனவே, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலய உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 237 வழக்கறிஞர்கள்  உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு கடிதம் எழுதி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, பிரிவு உபச்சார விழாவை தவிர்த்தார்.இன்றைய பிரிவு உபச்சார விழாவை தவிர்த்துவிட்டு சாலை மார்க்கமாக கொல்கத்தா புறப்பட்டுச் சென்றார். தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி முன்பு வழக்குகள் இன்று பட்டியலிடப்பட்ட போதிலும் விசாரணைக்கு அவர் அமரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு