பிரான்மலை பகுதியில் நெல் அறுவடை பணிகள் மும்முரம்

சிங்கம்புணரி : சிங்கம்புணரி, பிரான்மலை, வேங்கைபட்டி உள்ளிட்ட பகுதிகளில் புரட்டாசி மாதம் முதல் நெல் நடவு பணிகள் மும்முரமாக நடைபெற்றது. சிங்கம்புணரி பகுதியில் போதிய மழை இல்லாததாலும், மற்றும் தாமதமாக பெய்ததால் நெல் நடவு பணிகளும் தாமதமானது. கடந்த ஆண்டில் மழையால் நெற்பயிர்கள் வீணான நிலையில் இந்த ஆண்டு பரவலான விளைச்சல் ஏற்பட்டுள்ளது. கூலி ஆட்கள் பற்றாக்குறை மற்றும் அறுவடை இயந்திரங்கள் பற்றாக்குறையால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டது. தற்போது பெரும்பாலான இடங்களில் அறுவடை பணிகள் முடிந்த நிலையில் பிரான்மலை சுற்றியுள்ள பகுதிகளில் நெல் அறுவடை பணிகளை விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்….

Related posts

குமரியில் கனமழை காரணமாக உப்பு விலை உயர்வு

தமிழ்நாட்டில் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்