பிரபல நியூஸ் ஏஜென்சி அலுவலகத்தில் போட்டோகிராபர் தூக்கிட்டு தற்கொலை: உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

சென்னை: 5 வருடங்களாக சரியாக ஊதியம் கொடுக்காமல் இழுத்து அடித்ததால் பிரபல நியூஸ் ஏஜென்சி நிறுவனத்தின் போட்டோகிராபர் அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை ெசய்து கொண்டார். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி நமச்சிவாயம் தெருவை சேர்ந்தவர் குமார்(56). மூத்த போட்டோகிராபரான இவர் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது நுங்கம்பாக்கம் லேக் ஏரியா 2வது தெருவில் இயங்கி வரும் பிரபல நியூஸ் ஏஜென்சி நிறுவனத்தில் போட்டோகிராபராக வேலை செய்து வந்தார். குமாருக்கு நியூஸ் ஏஜென்சி நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாக சரியாக ஊதியம் கொடுக்காமல் இழுத்து அடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பம் நடத்த முடியாமல் அவர் தவித்து வந்துள்ளார். மேலும் மகள் திருமணத்துக்கு பணம் தேவைப்பட்டதால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் குமார் அலுவலகத்துக்கு வந்தார். பிறகு ஊதியம் தொடர்பாக தனது அலுவலக நிர்வாகிகளிடம் பேசியதாக கூறப்படுகிறது. பிறகு அலுவலகத்தில் யாரிடமும் சரியாக பேசாமல் அலுவலகத்தின் 2வது மாடிக்கு சென்றார். வெகு நேரமாகியும் அறைக்குள் சென்ற அவர் வெளியே வராததால் அலுவலக ஊழியர்கள் 2வது மாடிக்கு சென்று பார்த்தபோது, குமார் மின்விசிறி கொக்கியில் கயிறு கட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அலுவலக ஊழியர்கள் உடனே சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்க தகவல் அளித்தனர். அதன்படி விரைந்து வந்த போலீசார் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், குமாரின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊதியம் சரியாக தராததால் மனமுடைந்த மூத்த போட்டோகிராபர் ஒருவர் பணி செய்த தனது அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவிமுதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகை புகைப்பட கலைஞராக பணியாற்றிய குமார் நேற்று அகால மரணமடைந்த செய்தியறிந்து மிகவும் துயருற்றேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த புகைப்படக் கலைஞரின் குடும்ப சூழ்நிலையைக் கருதி சிறப்பு நேர்வாக ₹3 லட்சம் பத்திரிகையாளர் நல நிதியத்தில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்’’ என கூறியுள்ளார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை