பிரபல தாதா தரின் கூட்டாளி ரவுடி தியாகு குண்டாசில் கைது

காஞ்சிபுரம்: பிரபல தாதா தரின் கூட்டாளி ரவுடி தியாகுவை, போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் தாதா தர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், இறந்தார். அவரது இடத்தை பிடிக்க அவரது கூட்டாளிகள் தீவிரமாக ஈடுபட்டனர். இதையொட்டி மாவட்டத்தில் பல கொலை சம்பவங்கள் நடந்தன.இதைதொடர்ந்து கடந்த மாதம், தாதா தரின் கூட்டாளி காஞ்சிபுரம் பொய்யா குளம் பகுதியை சேர்ந்த தியாகு ( எ ) தியாகராஜனை (33) போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். தியாகு மீது காஞ்சிபுரம் மாவட்ட காவல் நிலையங்களில் 11 கொலை, 23 கொலை முயற்சி, கொள்ளை மற்றும் அடிதடி உள்பட மொத்தம் 75 வழக்குகள் உள்ளன.தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட தியாகுவை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்பி சுதாகர், கலெக்டர் ஆர்த்திக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் ஆர்த்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள பிரபல ரவுடி தியாகுவை, ஓராண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க நேற்று உத்தரவிட்டார்….

Related posts

சென்னையில் ரூ.22 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: இளம்பெண் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.21 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்..!!

சென்னையில் 27 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் சீண்டல்: கோயில் ஊழியர் கைது