பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.79 லட்சம் கையாடல் செய்த தாய், மகள், உறவினர் கைது

 

விருதுநகர், ஜூன் 25: சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரதமர் வீடுகட்டும் திட்டத்தில் ரூ.79 லட்சம் கையாடல் செய்த தாய், மகள் உட்பட 3 பேர் கைதாகி உள்ளனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூரை சேர்ந்தவர் ரேவதி. இவர் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் தற்காலிக கணினி உதவியாளராக பணியாற்றி வந்தார்.

இவரது தாய் தெய்வானை, சடையம்பட்டி ஊராட்சி செயலாளராக பணியாற்றுகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் ரூ.79 லட்சத்து 63 ஆயிரத்து 505 வரை மோசடி செய்தது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட 76 பயனாளிகளின் பெயர்களை பயன்படுத்தி ரேவதி, அவரது மகன், உறவினர்கள் மனோகர், ராமகிருஷ்ணன் ஆகியோரின் வங்கி கணக்கில் வரவு வைத்தது தெரிந்தது.

இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரனின் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் தாய் தெய்வானை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் சரணடைந்தார். மகள் ரேவதி மற்றும் உறவினர் மனோகர் இருவரும் தென்காசியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ரேவதி, மனோகர் கைது செய்யப்பட்டனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு