பிரதமர் மோடி விமானம் 25 நிமிடம் தாமதம்

சென்னை: செஸ் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க, பிரதமர் மோடியின் தனி விமானம் நேற்று மாலை 4.45 மணிக்கு சென்னை வர திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த விமானம் 25 நிமிடங்கள் தாமதமாக, மாலை 5.10 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தது. அப்போது தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எம்பி தயாநிதி மாறன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பிரதமர் மோடியை வரவேற்றனர். பின்னர், பிரதமர் மோடி தனி ஹெலிகாப்டரில் புறப்பட்டு, ஐஎன்எஸ் அடையாறு சென்றார். அவருக்கு பாதுகாப்பாக 2 ஹெலிகாப்டர்கள் சென்றன. தலைமை செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோரும் ஹெலிகாப்டரில் சென்றனர்.  பிரதமரின் தனி விமானம் தாமதமாக புறப்பட்டதுதான் சென்னை வர தாமதம் ஆனதற்கு காரணம் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை