பிரதமர் மோடி மதுரையில் இருந்தபோது ராஜினாமா செய்த பாஜ மாவட்ட செயலாளர்: மத்திய அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டு

மதுரை: பிரதமர் மோடி மதுரையில் இருந்த போது பாஜ மாவட்ட செயலாளர் பதவி விலகியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பாஜவில் ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சிப்பிரிவு மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் ஆராவமுதன். ஓவிய ஆசிரியர். மதுரை மேற்கு ெதாகுதியை சேர்ந்த இவர் பாஜவில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இவர், ‘‘பெட்ரோல், டீசல் மற்றும் அத்யாவசிய பொருட்களின் விலைவாசி உயர்ந்து கொண்டே ெசல்கிறது. குறைக்க எந்த முயற்சியும் மோடி அரசு எடுக்கவில்லை’’ என கவலை அடைந்தார். இதையடுத்து மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து விலக முடிவு செய்தார். அதன்படி ராஜினாமா கடிதத்தை மாநகர் மாவட்ட தலைவர் சீனிவாசனுக்கும், மாநில தலைமைக்கும் நேற்று அனுப்பி வைத்து பதவியில் இருந்து விலகினார்.ஆராவமுதன் கூறும்போது, ‘‘பிரதமர் மோடி மதுரையில் இருந்தபோது பதவி விலகியிருக்கிறேன். மத்திய அரசு விலைவாசி உயர்வுக்கு காரணமாக பெட்ரோல், டீசல் உயர்வால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறி விட்டது. மதுரை மேற்கு தொகுதியில் எம்எல்ஏவான அமைச்சர் செல்லூர் ராஜூவும், கடந்த 10 வருடங்களாக எந்தவித வளர்ச்சித்திட்டங்களையும் செய்யவில்லை. இந்த காரணங்களுக்காக கட்சி பொறுப்பில் இருந்து விலகுகிறேன்’’ என்றார்….

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி