பிரதமர் சொத்து மதிப்பு ரூ.2.23 கோடியாக உயர்வு: ஒரே ஆண்டில் ரூ.26 லட்சம் அதிகரிப்பு

புதுடெல்லி:  பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு, கடந்த ஒராண்டில் ₹26 லட்சம் அதிகரித்து ₹2.23 கோடியாக உயர்ந்துள்ளது.  பிரதமர் மோடி சமீபத்தில் தனது சொத்து பட்டியலை வெளியிட்டார். இதில், தன்னிடம் மொத்தமாக ₹2.23 கோடிக்கு சொத்துகள் இருப்பதாக கூறியுள்ளார். இவை பெரும்பாலும் வைப்பு தொகையாக உள்ளது. அவரிடம்  அசையும் சொத்துக்கள் எதுவும் இல்லை. காந்தி நகரில் உள்ள நிலத்தின் பங்கையும் அவர் நன்கொடையாக வழங்கி விட்டதால், அவரிடம் அசையா சொத்துக்கள் ஏதும் இல்லை. மார்ச் 31ம் தேதி வரையிலான தகவல்களின்படி அவருக்கு பத்திரங்களில் முதலீடு, பங்கு, பரஸ்பர நிதி எதுவும் இல்லை. சொந்தமாக வாகனமும் இல்லை. ஆனால், அவரிடம் ₹1.73 லட்சம் மதிப்புள்ள 4 தங்க மோதிரங்கள் உள்ளன. பிரதமரின் அசையும் சொத்துக்கள் ஓர் ஆண்டுக்கு முன்பு இருந்ததை காட்டிலும் ₹26.13 லட்சம் உயர்ந்துள்ளது.  கடந்த 2002ம் ஆண்டு குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டை வாங்கியுள்ளார். இதில், மேலும் 3 பேர் உரிமையாளர்களாக இருக்கின்றனர். இது, நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 31ம் தேதி நிலவரப்படி பிரதமரிடம் ₹35,250 ரொக்கம் உள்ளது. தபால் நிலையத்தில் தேசிய சொத்து சான்றிதழாக ₹9,05,105 இருக்கிறது. ₹1,89,305 மதிப்புள்ள காப்பீடு வைத்துள்ளார்….

Related posts

நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது: ஒருவர் கூட முழு மதிப்பெண் பெறவில்லை

கேரளாவில் 5 வருடங்களில் 88 போலீசார் தற்கொலை: சட்டசபையில் தகவல்

மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் சிபிஐ நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு