பிரதமர் குறித்து அவதூறு பரப்பியவர் கைது

சென்னை: பிரதமரை யூடியூப் சேனலில் தரக்குறைவாக விமர்சித்தவரை மாதவரத்தில் போலீசார் கைது செய்தனர். பிரதமர் நரேந்திர மோடியை தவறாக விமர்சனம் செய்து யூடியூப்பில் பதிவிட்ட மர்ம நபர் குறித்து   உத்தரப்பிரதேசத்தில்  உள்ள கொட்வாலி காவல் நிலையத்தில் பலர் புகார் அளித்தனர். அதன்பேரில் அம்மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த நபரை தேடிவந்தனர். அவர், சென்னை மாதவரத்தில் வசிப்பதை  அறிந்த உத்தரப்பிரதேச போலீசார், நேற்று மதியம் மாதவரம் வந்து, வி.ஆர்.டி.நகர் 2வது மெயின் ரோட்டில் வசித்த மன்மோகன் மிஸ்ரா (62) என்பவரை  கைது செய்து மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூர் கொட்வாலி காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மன்மோகன் மிஸ்ரா பிரதமரை பற்றியும்  பல அரசியல் தலைவர்களையும்  விமர்சனம் செய்து அவர்களை தவறாக சித்தரித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதை வாடிக்கையாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது….

Related posts

பந்தலூர் அருகே கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு கடத்திய உயர் ரக போதை பொருள் பறிமுதல்

தண்ணீர் பிடிப்பதில் தகராறு நண்பரை கத்தியால் குத்திக்கொன்ற வாலிபர் கைது

காரில் புகையிலை பொருட்கள் கடத்திய ராஜஸ்தான் வாலிபர் கைது