பிரதமர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

கோவை, செப். 19: கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளில் 2024-25ம் கல்வியாண்டில் எம்பிபிஎஸ், பிஇ, பிடெக், பிடிஎஸ், பிவிஎஸ்சி, பிஎஸ்சி நர்சிங், பிஎஸ்சி அக்ரி, பிஎட், பிபிஏ, பிசிஏ, பி பார்மா உள்ளிட்ட தொழில் மற்றும் தொழிற்சார்ந்த அரசு ஒழுங்கு முறை அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மைய முப்படை வீரர் வாரியத்தின் மூலம் வழங்கப்படும் பிரதமரின் கல்வி உதவித்தொகையை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, 12-ம் வகுப்பில் 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து தேர்ச்சி பெற்று தொழிற் படிப்பு பயிலும் முன்னாள் படை வீரர்களின் இரு குழந்தைகள் மட்டுமே இத்திட்டத்தில் பயனடைய முடியும். இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் தகவல் கையேடுகளை www.online.ksb.gov.in என்ற இணைதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் ஆன்லைன் மூலம் மட்டுமே வருகிற நவம்பர் மாதம் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்