பிரசவத்தின்போது மூச்சு திணறல் ஏற்பட்டு நர்ஸ் சாவு

சிதம்பரம், ஜூலை 4: கள்ளக்குறிச்சி மாவட்டம் வேளாநந்தல் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி சந்தியா (24). நர்சிங் படித்துள்ளார். இவருக்கு தலைப்பிரசவம் என்பதால் தனது பிறந்த ஊரான கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள அல்லூர் கிராமத்தில் தங்கி இருந்து வந்துள்ளார். சேத்தியாத்தோப்பு அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக நேற்று காலை சேர்க்கப்பட்டார். இதை தொடர்ந்து சுகப்பிரசவம் நடைபெற்று அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் திடீரென சந்தியாவுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரத்தில் உள்ள காமராஜ் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். தலை பிரசவத்தில் தாய் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தனது மனைவி சாவில் சந்தேகம் உள்ளதாகவும், பிரசவம் பார்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சந்தியாவின் கணவர் லட்சுமணன் போலீசில் புகார் செய்துள்ளார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை