பின் வீல் சமோசா

பக்குவம்:கூம்பு சமோசாவுக்குக் குறிப்பிட்டுள்ள மாவில் ஆரஞ்சு பழ அளவில் உருண்டை எடுத்துக்கொண்டு உருட்டிக்கொள்ளவும். பின்னர் சிறிது மைதா மாவு தூவி பெரிய வட்டமாகத் தேய்த்துக்கொள்ளவும். அதில் தயார் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மசாலாவைச் சமமாகப் பரப்பி வைக்கவும். பின்னர் ஓரங்களில் இருந்து ரோல் செய்து உருட்டிக்கொள்ளவும். ஒரு கத்தியால் அரை அங்குலத் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வைத்து காயவிடவும். ஒரு சிறிய கிண்ணத்தில் 2 டேபிள்ஸ்பூன் மைதா மாவுடன் அரை கப் தண்ணீர் ஊற்றிக் கரைத்துக் கொள்ளவும். இப்போது நறுக்கிய வட்டங்களை மைதா கரைசலில் இரண்டு பக்கமும் நன்கு தோய்த்து எண்ணெயில் போடவும். சிறிது நேரம் கழித்து மெதுவாக திருப்பிப் போட்டு பொன்னிறமாக மாறியதும் தட்டில் மாற்றிக்கொள்ளவும். புதினா கொத்தமல்லிச் சட்னி வைத்து சூடாகப் பரிமாறவும்….

Related posts

கோதுமை ரவை புலாவ்

ஜவ்வரிசி உப்புமா

மிக்ஸ்டு வெஜிடபிள் சப்பாத்தி