பிச்சை எடுத்தாவது நாட்டு மக்களை காப்பாற்றுங்கள்: ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யுங்கள்: உயர்நீதிமன்றம் காட்டம் !

டெல்லி: பிச்சை எடுத்தாவது நாட்டு மக்களை காப்பாற்றுங்கள் என மத்திய அரசு மீது டெல்லி உயர்நீதிமன்றம் கடும் காட்டமான பதில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3.15 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் தடுப்பூசி பற்றாக்குறை இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து, பொது மக்களை காப்பாற்றுவதில் மத்திய அரசு சுணக்கம் காட்டி வருவதாகவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.இந்த நிலையில் இது குறித்த வழக்கு ஒன்றில் மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் காட்டமான அறிவுறுத்தல் ஒன்று கூறியுள்ளது. பிச்சை எடுங்கள், திருடுங்கள், கடன் வாங்குங்கள்., எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யுங்கள் என்று மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் காட்டமாக அறிவுறுத்தி உள்ளது….

Related posts

அவ்வளவு சீக்கிரம் நான் இறந்துவிட மாட்டேன்; மோடியை பிரதமர் பதவியிலிருந்து நீக்கும் வரை உயிரோடு இருப்பேன்: மேடையில் மயங்கிய பின் மீண்டும் எழுந்து கார்கே ஆவேசம்

2 கட்ட தேர்தல் முடிந்த நிலையில் ஜம்மு – காஷ்மீரில் நாளை இறுதிகட்ட வாக்குப்பதிவு: 40 பதவிக்கு 415 வேட்பாளர்கள் போட்டி

3 மருத்துவர்கள், 3 செவிலியர்கள் மீது தாக்குதல்; டாக்டர்கள் மீண்டும் தீப்பந்தம் ஏந்தி பேரணி: கொல்கத்தாவில் பதற்றம்