பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கான புகார் எண்களில் தகவல் தரலாம்

சென்னை: சென்னை தொலைத்தொடர்பு வட்ட சிஜிஎம் சஞ்சீவி நேற்று வெளியிட்ட அறிக்கை: கொரோனா காலம் என்பதால் செல்போன், லேன்ட்லைன், பிராட்பேண்ட், எப்.டி.டி.எச் வாடிக்கையாளர்கள் தங்களின் குறைகளை தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களின் புகார்கள் குறித்து 7 நாட்களில் பதில் தெரிவிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி, மத்திய பகுதிக்கு உட்பட்ட சென்ட்ரல், அடையார் பகுதி மக்கள் 044-28552216, 9445084760 ஆகிய எண்களிலும், வடக்கு பகுதிக்கு உட்பட்ட கல்மண்டபம், மாதவரம், அண்ணாநகர், அம்பத்தூர் பகுதி மக்கள் 044-25395858, 9445083639 ஆகிய எண்களிலும், மேற்கு பகுதிக்கு உட்பட்ட கோடம்பாக்கம், கே.கே.நகர், காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதி மக்கள் 044-23728877, 9445084745 ஆகிய எண்களிலும், தெற்கு பகுதிக்கு உட்பட்ட குரோம்பேட்டை, செங்கல்பட்டு பகுதி மக்கள் 044-22501122, 9445084018 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும், தகவலுக்கு www.chennai.bsnl.co.in என்ற இணையதளத்தை காணலாம்….

Related posts

கள்ளக்காதல் விவகாரத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பணி நீக்கத்தை எதிர்த்து முன்னாள் உதவி பேராசிரியர் மனு: கலாஷேத்ரா அறக்கட்டளை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம்; சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை