பிஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி முகாம்

 

சிவகாசி, நவ.27: சிவகாசி பி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியில் கணிப்பொறியியல் துறை, ஏ.ஐ.சி.டி.இ அடல் நிதி உதவியுடன் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி ஆக்குமென்டல் ரியாலிட்டி அண்ட் விர்ச்சுவல் ரியாலிட்டி என்ற தலைப்பின் கீழ் 6 நாட்கள் நடந்தது. கல்லூரி இயக்குனர் விக்னேஸ்வரி அருண்குமார் தலைமை வகித்தார். முதல்வர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். கல்லூரி டீன் மாரிச்சாமி, கணிப்பொறியியல் துறை தலைவர் ராம திலகம் வாழ்த்தினர்.

சென்னை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னிக்கல் ட்ரைனிங் ரிசர்ச் பேராசிரியர் மல்லிகா, பாண்டிச்சேரி யூனிவர்சிட்டி ஜானகிராமன், வெள்ளூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி விமலா தேவி, கோமதி, கிரேஸ்லின் ஜேஸ்மின், பேராசிரியர்கள் பிரவீன் குமார், தங்க குமார், சரோஜா பேசினர். பல்வேறு கல்லூரியில் இருந்து 40க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். சிறப்பாக செயல்பட்டு தேர்ச்சி பெற்ற பேராசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், கணிப்பொறியியல் துறை பேராசிரியர் பாலசுப்பிரமணியன், ஒருங்கிணைப்பாளர்கள் பிரியதர்ஷினி, ரமணி செய்தனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு