பிஎம்டபிள்யூ எக்ஸ்எம்

பிஎம்டபிள்யூ நிறுவனம் கடந்த செப்டம்பரில் தனது புதிய எஸ்யுவியை அறிமுகம் செய்தது. தற்போது இந்த நிறுவனம் எக்ஸ்எம் என்ற எஸ்யுவியை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் எம் பிராண்டில், 1978ம் ஆண்டுக்கு பிறகு வெளிவந்துள்ள 2வது கார் இது.என்பதும் குறிப்பிடத்தக்கது. ஹைபிரிட் மாடலாக வெளிவந்துள்ளது. இதில் 4.4 லிட்டர் டிவின் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 653 பிஎச்பி பவரையும், 800 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டது. இந்த ஹைபிரிட் காரில் 25.7 கிலோவாட் அவர் பேட்டரி உள்ளது. எனவே, எலக்ட்ரிக்கில் 88 கிலோ மீட்டர் தூரம் வரை இயக்கலாம். 7.4 கிலோவாட் அதிவேக சார்ஜர் மூலம் விரைவாக சார்ஜ் செய்யலாம். ஷோரூம் விலையாக சுமார் ரூ.2.6 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது….

Related posts

லித்தியம் அயன் பேட்டரி

மின்னழுத்த நிலைப்படுத்தி (VOLTAGE STABILIZER)

ரிமோட் கண்ட்ரோல்