பாளை அருகே பாளையஞ்செட்டிகுளத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட பதிவு முகாமை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு

கேடிசி நகர், ஜூலை 29: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப படிவம் பதிவு மையம் அந்தந்த நகரம் மற்றும் கிராமங்களில் உள்ள உள்ளாட்சி மையங்களில் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டு அதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. மையங்களில் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படுவதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தர்மபுரியில் தொடங்கி வைத்தார். நெல்லையில் பாளையங்கோட்டை, பாளையஞ்செட்டிகுளம் கிராம ஊராட்சி சேவை மையத்தில் அமைந்துள்ள கலைஞர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்ப பதிவு மையத்தை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார். இதில் ஏராளமான பயனாளிகள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் நெல்லை கலெக்டர் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் சுரேஷ், பாளையங்கோட்டை பிடிஓக்கள் பொன்ராஜ், பாலசுப்பிரமணியன், நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன்கான், பாளை எம்எல்ஏ அப்துல்வகாப், மாநகர செயலாளர் சுப்பிரமணியன், துணை மேயர் கேஆர்.ராஜூ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் விஎஸ்ஆர்.ஜெகதீஷ், மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் கிரகாம்பெல், பாளை தெற்கு ஒன்றிய செயலாளரும், யூனியன் சேர்மனுமான தங்கப்பாண்டியன், செட்டிகுளம் பஞ்சாயத்து தலைவர் ஏமன், துணைத்தலைவர் சஞ்சய்காந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கக்கன்நகர் நான்கு வழிச்சாலை பாலம் அருகே திமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர். இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் டிபிஎம் மைதீன்கான், அப்துல்வகாப் எம்எல்ஏ, மாநகர செயலாளர் சுப்பிரமணியன், பாளை தெற்கு ஒன்றிய செயலாளர் கேஎஸ்.தங்கபாண்டியன், மத்திய ஒன்றிய செயலாளர் போர்வெல் கணேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் வேலன்குளம் முருகன், பொதுக்குழு உறுப்பினர்கள் பரமசிவஐயப்பன், நடராஜன், வேலன்குளம் கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் பிரபாகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் வில்சன் மணித்துரை, பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன், நமச்சிவாயம் என்ற கோபி, அண்டன் செல்லத்துரை, துபைசாகுல், மாநகர பொருளாளர் பூக்கடை அண்ணாத்துரை, மாநகர துணைச்செயலாளர் அப்துல்கயூம், மாவட்ட துணைச்செயலாளர்கள் விஜிலா சத்யானந்த், தர்மன், எஸ்வி.சுரேஷ், மானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்மணி, பஞ்சாயத்து தலைவர்கள் கங்கைகொண்டான் கவிதா பிரபாகர், கீழநத்தம் அனுராதா ரவிமுருகன், மகளிரணி அனிதா, விவி.நடராஜன், வீரபாண்டியன், நெல்லை ரவி, சுரேஷ், மானூர் யூனியன் சேர்மன் லேகா அன்பழகன், மாநகர துணைச்செயலாளர் மூளிகுளம் பிரபு பாண்டியன், கவுன்சிலர்கள் டாக்டர் சங்கர், அலி ஷேக்மன்சூர், தச்சை பகுதி பொருளாளர் அய்யாச்சாமி பாண்டியன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் காசிமணி, வக்கீல் தினேஷ், டாஸ்மாக் தொமுச அரசன்ராஜ், வர்த்தக அணி அவதார் ஷாஜகான், வட்டச் செயலாளர்கள் சுப்ரீத் சுப்பிரமணியன், பொறியாளர் அணி சாய்பாபா, விவசாய அணி கால்வாய் துரைப்பாண்டியன், மாவட்ட பிரதிநிதி வின்சென்ட், சிறுபான்மை பிரிவு பீரப்பா, பாளை மைக்கேல் ராஜேஷ், இளைஞரணி சாமுவேல், வாசுகி செல்லத்துரை, பாளை சதீஷ், முன்னாள் கவுன்சிலர் நவநீதன், இளைஞரணி எம்என்ஆர்.இசக்கிபாண்டியன், மனோஜ்குமார், வக்கீல்கள் கந்தசாமி, காமினிதேவன், மாவட்ட துணைச்செயலாளர் புறநகர் கிரிஜாகுமார் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்