பாளையில் அரசு மருத்துவமனை ஊழியரின் கார் தீப்பிடித்து எரிந்து சேதம்

நெல்லை, அக். 21: பாளையங்கோட்டை பெருமாள்புரம் அருகேயுள்ள தாமிரா சிட்டி ராமச்சந்திரா காலனியை சேர்ந்தவர் டேனியல் கிறிஸ்டோபர் (45). இவர் நெல்லை அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தெரிந்தவரிடம் இருந்து 2012ம் ஆண்டிற்கான காரை விலைக்கு வாங்கினார்.

இதனையடுத்து அந்த காரை பிரார்த்தனை செய்வதற்காக குடும்பத்துடன் பாளை பெருமாள்புரத்திலுள்ள சர்ச்சுக்கு சென்றார். பின்னர் ஜெபம் முடிந்து அவர் காரில் குடும்பத்துடன் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது மத்திய சிறை அருகேயுள்ள பாளை ரயில்வே பீடர் சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கார் தீப்பிடித்து கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் காரிலிருந்து டேனியல் கிறிஸ்டோபர் மற்றும் குடும்பத்தினர் உடனடியாக வெளியேறி தப்பினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பாளை தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் கார்த்திகேயன் மற்றும் வீரர்கள் சென்று காரில் ஏற்பட்ட தீயை சிறிது நேரம் போராடி அணைத்தனர். இந்த விபத்தில் கார் தீப்பிடித்து எரிந்து சேதமானது. காரிலுள்ள பேட்டரியிலிருந்து ஏற்பட்ட மின்கசிவு காரணமாக கார் தீப்பீடித்து எரிந்துள்ளது என தீயணைப்பு அதிகாரி தெரிவித்தனர். இதில் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து பாளை பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சட்டப்பேரவை குழு விருதுநகரில் இன்று ஆய்வு

நரிக்குடி அருகே ரேஷன் பொருட்கள் வாங்க கண்மாய் நீரை கடந்து செல்லும் கிராமமக்கள்: ஊரில் புதிய கடை திறக்கப்படுமா?

சிவகாசியில் மாநில அளவிலான கராத்தே போட்டி