பால் பண்ணையில் பூட்டை உடைத்து பணம் திருடியவர் கைது

 

பெரம்பலூர்,ஆக.25: பெரம்பலூர் பால் பண்ணையில் அதிகாலை பூட்டை உடைத்து பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார். பெரம்பலூர் புது பஸ் டாண்டு அருகே வசித்து வருபவர் துரைசாமி மகன் செல்வகுமார் (37). இவர், பெரம்பலூர் புதுபஸ்டாண் டிலிருந்து 4ரோடு செல்லும் வழியில் பால் பண்ணை நடத்தி வருகிறார். வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு பால்பண்ணையை மூடிவிட்டு வீட்டிக்குச் சென்றிருந்தகுமார், நேற்று (24ம்தேதி) அதிகாலை பால் பண்ணையை திறக்க வந்தார். அப்போது, கடையில் பூட்டியிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். உள்ளே சென்று பார்த்த போது, அடையாளம் தெரியாத ஒருவர் உள்ளே வைத்திருந்த பணத்தை எண்ணிக்கொண்டிருந்தாராம்.

இதையடுத்து, செல்வ குமார் தனது நண்பர்களின் உதவியுடன் அவரை பிடித்து பெரம்பலூர் போலீ சாருக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அவரை பிடித்து மேற்கொண்ட விசாரணையில் பெரம்பலூர் மாவட்டம், கல்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முத்துசாமி (50) என்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிந்து முத்து சாமியை கைது செய்து அவரிடமிருந்து பால் பண்ணையில் திருடிய ரூ.10 ஆயிரத்தையும் பறி முதல் செய்தனர். பின்னர், பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் முத்துசாமியை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு