பாலியல் வழக்கில் சிறை தண்டனை சிறப்பு டிஜிபியின் மேல் முறையீட்டு மனு 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு

விழுப்புரம், நவ. 7: பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபியின் மேல் முறையீட்டு விசாரணை 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணத்தின் போது பாதுகாப்பு பணியிலிருந்த பெண் எஸ்.பி. ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி மற்றும் உடந்தையாக இருந்த புகாரில் முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி. ஆகியோர் மீது விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பராணி குற்றம் சாட்டப்பட்ட சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20,500 அபராதமும், முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பிக்கு ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பை எதிர்த்து செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. ஜூன் 22ம் தேதியும், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் ஜூலை 5ம் தேதியும் தனித்தனியாக விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுதாக்கல் செய்தனர். நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு