பாலியல் பலாத்கார வழக்கில் டிஎன்ஏ சோதனை முடிவு உறுதியான ஆதாரம் அல்ல: மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம், நவி மும்பையை சேர்ந்த ஒருவர் தனது வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமியை கடந்த 2020ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் கைதான குற்றவாளி தனக்கு ஜாமீன் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், டிஎன்ஏ பரிசோதனையில் சிறுமியின் கருவில் உள்ள குழந்தைக்கு தான் தந்தை அல்ல என உறுதியாகி உள்ளதால் வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுமென கோரினார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி பாரதி டாங்ரே, அவருடைய மனுவை தள்ளுபடி செய்தார். நீதிபதி தனது தீர்ப்பில், ‘டிஎன்ஏ சோதனை முடிவு எதிர்மறையாக இருந்தாலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் சாட்சியத்தை நம்ப மறுக்க எந்த காரணமும் இல்லை. பலாத்கார வழக்குகளில் டிஎன்ஏ சோதனை என்பது உறுதியான ஆதாரம் என்று கூற முடியாது. குற்றம்சாட்டப்பட்ட நபர் பணம் கொடுத்து குற்றத்தை மறைக்கப் பார்த்துள்ளார். எனவே, டிஎன்ஏ சோதனை முடிவு எதிர்மறையாக இருக்கும் சமயங்களில், வழக்கின் மற்ற தகவல்களை பரிசீலிக்க வேண்டியது அவசியம்,’ என உத்தரவிட்டுள்ளார்….

Related posts

அவ்வளவு சீக்கிரம் நான் இறந்துவிட மாட்டேன்; மோடியை பிரதமர் பதவியிலிருந்து நீக்கும் வரை உயிரோடு இருப்பேன்: மேடையில் மயங்கிய பின் மீண்டும் எழுந்து கார்கே ஆவேசம்

2 கட்ட தேர்தல் முடிந்த நிலையில் ஜம்மு – காஷ்மீரில் நாளை இறுதிகட்ட வாக்குப்பதிவு: 40 பதவிக்கு 415 வேட்பாளர்கள் போட்டி

3 மருத்துவர்கள், 3 செவிலியர்கள் மீது தாக்குதல்; டாக்டர்கள் மீண்டும் தீப்பந்தம் ஏந்தி பேரணி: கொல்கத்தாவில் பதற்றம்