பாலியல் நோய்களை கட்டுப்படுத்த 2023 புத்தாண்டுக்கு ‘காண்டம்’ இலவசம்: பிரான்ஸ் அதிபர் அதிரடி அறிவிப்பு

பாரிஸ்: வரும் 2023 புத்தாண்டு தினத்தில் இருந்து பிரான்ஸ் நாட்டில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் மருந்தகங்களில் ஆணுறை இலவசமாக வழங்கப்படும் என்று அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அறிவித்தார். பிரான்ஸ் நாட்டில் இளம் வயதினரிடையே பாலியல் ரீதியாக பரவும் நோய்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. வரும் 2023 புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, வாலிப வயதினர் பாலியல் ரீதியாக நெருக்கமாக பழக வாய்ப்புள்ளதால் அதன் மூலம் தொற்று நோய் பரவுவதை தடுக்க புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வெளியிட்ட அறிக்கையில், ‘பிரான்ஸில் வரும் 2023 ஜனவரி 1ம் தேதி முதல் 18 முதல் 25 வயதுக்கு உட்பட அனைவருக்கும் அனைத்து மருந்தகங்களிலும் இலவசமாக ஆணுறை (காண்டம்) வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தேவையற்ற கர்ப்பத்தைத் தடுக்க முடியும். பாலியல் நோய் பரவுவதையும் தடுக்க முடியும். இலவச ஆணுறை திட்டத்தில் சிறார்களை ஏன் சேர்க்கவில்லை என்று பலரும் கேட்கின்றனர். விரைவில் அதனை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் சிறார்களும் அதிகளவில் உடலுறவு கொள்கிறார்கள்; அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம்’ என்றார். …

Related posts

வங்கதேசத்தில் பெய்த கனமழையால் முக்கிய ஆறுகளில் வெள்ளம்!

2ம் கட்டமாக நடந்த ஈரான் அதிபர் தேர்தல் பெசஸ்கியான் வெற்றி: ஒரு மாதத்திற்குள் பதவியேற்பு

இங்கிலாந்து புதிய பிரதமர் கியர் ஸ்டார்மருடன் பிரதமர் மோடி பேச்சு: தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய உறுதி