Sunday, October 6, 2024
Home » பாலியல் தொழிலாளர்களை நாடி சென்ற பிரபல சீன நடிகர் கைது: விளம்பர ஒப்பந்தங்கள் அதிரடி ரத்து

பாலியல் தொழிலாளர்களை நாடி சென்ற பிரபல சீன நடிகர் கைது: விளம்பர ஒப்பந்தங்கள் அதிரடி ரத்து

by kannappan

பீஜிங்: பாலியல் தொழிலாளர் களை நாடிச் சென்ற சீன நடிகர்  லீ யிஃபெங் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவருடன் செய்து கொண்ட விளம்பர ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டன. பிரபல சீன நடிகர் லீ யிஃபெங் (35), மிஸ்டர் சிக்ஸ், தி ஃபவுன்டிங் ஆஃப் ஆன் ஆர்மி உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர். சீனாவில் பாலியல் தொழில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகர் லீ யிஃபெங் பாலியல் தொழிலாளர்களை நாடிச் சென்றதாக கூறப்படுகிறது. அதையடுத்து பீஜிங் காவல்துறை லீ யிஃபெங்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. தொடர்ந்து அவர் 15 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சில வதந்திகள் பரவின. அதனால் பிராடா, சென்சோடைன், ரெமிமார்டின், பனேராய், லுக் ஃபூக் ஜூவல்லரி போன்ற பல உள்ளூர் மற்றும் சர்வதேச பிராண்டுகளின் விளம்பர ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டன. அது மட்டுமல்லாமல், சீனாவின் சிறந்த விருதுகள் பட்டியலில் இருந்தும் லீ யிஃபெங்கின் பெயர் நீக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் பாலியல் தொழில் தடைசெய்யப்பட்டு இருந்தாலும் கூட, ஷாங்காய் மற்றும் பீஜிங் போன்ற முக்கிய நகரங்களில் 10 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் பாலியல் தொழிலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. …

You may also like

Leave a Comment

17 − nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi