பாலக்காடு அருகே கிணற்றில் தவறி விழுந்து புலி சாவு

பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் நெம்மாராவை அடுத்த நெல்லியாம்பதி கூனம்பாலம் மேலப்பாடியில் பொதுக்கிணறு உள்ளது. இங்குள்ள தோட்ட தொழிலாளர்கள் குடிநீருக்காக இந்த கிணற்றை பயன்படுத்தி வருகிறார்கள். கடந்த திங்கட்கிழமை புலியின் சடலம் மிதந்தது. இதை பார்த்த தோட்ட தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்து நெல்லியாம்பதி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வன அதிகாரி தலைமையில் வனக்காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து புலியின் சடலத்தை மீட்டனர். இறந்தது 7 வயது மதிக்கத்தக்க பெண் புலி என்பதும், அது கிணற்றில் விழுந்து 5 நாட்கள் இருக்கலாம் என்றும் தெரியவந்தது. மேலும் இரைக்காக வேட்டையாடும்போது கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என்று வனத்துறையினர் கூறினர். புலியின் உடற்கூறு பரிசோதனைக்கு பின்னர் புதைத்தனர்….

Related posts

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை

கோவை மருதமலை கோயிலில் காட்டு யானை: வனத்துறை எச்சரிக்கை