பார்முலா 1 கார் பந்தயம் மேக்ஸ் மீண்டும் சாம்பியன்

டோக்கியோ: பார்முலா 1 கார் பந்தயத்தில், ரெட் புல் ரேசிங் அணி வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் (நெதர்லாந்து) தொடர்ந்து 2வது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். 2022 சீசனின் கடைசி பந்தயமான ஜப்பான் கிராண்ட் பிரீ தொடரில் அபாரமாக வென்ற மேக்ஸ் (3:01.44) மொத்தம் 366 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து கோப்பையை தக்கவைத்துக் கொண்டார். மழை காரணமாக பாதிக்கப்பட்ட இந்த பந்தயத்தின் முடிவு சர்ச்சையை ஏற்படுத்தினாலும், சாம்பியன்ஷிப்புக்கான புள்ளிப் பட்டியலில் மற்ற வீரர்களை விட 100க்கும் அதிகமான புள்ளிகள் முன்னிலை பெற்ற வெர்ஸ்டாப்பன் 2வது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். சக ரெட் புல் வீரர் செர்ஜியோ பெரஸ் (253 புள்ளி) 2வது இடமும், பெராரி அணி வீரர் சார்லஸ் லெக்ளர்க் (252) 3வது இடமும் பிடித்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மெர்சிடிஸ் நட்சத்திரம் லூயிஸ் ஹாமில்டன் 180 புள்ளிகள் மட்டுமே பெற்று 6வது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. …

Related posts

கோபா அமெரிக்கா கால்பந்து; அரையிறுதிக்கு அர்ஜென்டினா தகுதி

இந்திய வீரர்கள் ஒரு குடும்பத்தைப் போன்றவர்கள்: பாராட்டு விழாவில் டிராவிட் உருக்கம்

பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கத்தின் நிறத்தை இந்த முறை மாற்றுவேன்: இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து நம்பிக்கை