பாரதத்தின் ஒரு அங்கமாக இருப்பதை தமிழர்கள் உணரவில்லை: ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.என்.ரவி சர்ச்சைப் பேச்சு..!!

சென்னை: தமிழ்நாட்டை தமிழ்நாடு என்று அழைக்க கூடாது என்று ஆளுநர் ஆர்.என். ரவி பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டிலிருந்து ஏற்பாடுகள் செய்தவர்களை பாராட்டும் நிகழ்ச்சி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்.என். ரவி இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான செயல் திட்டம் இருந்தால் தமிழ்நாட்டில் மட்டும் அதற்கு எதிர்ப்புகள் வருவதாக கூறியுள்ளார். எல்லோரும் பாரதமாக ஒன்றாக இருக்கும் போது தமிழர்கள் மட்டும் தங்களை திராவிடர்கள் என அழைத்து கொள்கிறார்கள் என்றும் ஆர்.என். ரவி பேசியுள்ளார். தமிழ்நாட்டை தமிழ்நாடு என்று கூறுவதை காட்டிலும் தமிழகம் என்று கூறுவதே சரியாக இருக்கும் என கூறியுள்ள அவர் பாரதத்தின் ஒரு அங்கமாக தமிழ்நாடு இல்லையென்று கடந்த 50 ஆண்டுகளாக பிரச்சாரம் முன்னெடுக்கபடுவதாக குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாகவே பிரச்சாரம் கூட்டாட்சி குறித்து அளவுக்கு அதிகமான பேச்சுகள் எழுகின்றன என்றும் அவர் விமர்சித்துள்ளார். அரசியல் அமைப்பு சட்டத்தால் மாநிலங்கள் ஒருங்கிணைக்கபட்டதாக தமிழர்கள் நம்புவதாக குறிப்பிட்டுள்ள ஆளுநர் ரவி, மாநிலங்கள் இப்போதுதான் உருவானது ஆனால் பாரதம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவாகிவிட்டது என்றும் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.   …

Related posts

நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

மாடம்பாக்கத்தில் அடிப்படை வசதி கோரி அதிமுக 26ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு