பாதாம் வாழைப்பழ கேக்

செய்முறைவெண்ணெய் கால் கப்பினை உருக்கி தனியே வைக்கவும். வெல்லம், பட்டைப்பொடி, ஜாதிக்காய் பொடி மற்றும் பொடித்த பாதாமினை கலந்து வைக்கவும். உருக்கிய வெண்ணெயை கேக் டிரேயில் கொட்டி அதன் உட்புறம் முழுதும் பரவுமாறு தடவவும். இதன் மேல் கலந்து வைத்துள்ள பாதி வெல்லம் பாதாம் கலவையை தூவவும். மற்றொரு பாத்திரத்தில் மீதமுள்ள வெண்ணெய் மற்றும் சர்க்கரையை ேசர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். வெண்ணெய் சர்க்கரை நன்றாக கலந்து மிருதுவான பிறகு அதில் ஒவ்வொரு முட்டையாக சேர்த்து நன்கு அடிக்கவும். பிறகு மசித்த வாழைப்பழத்தை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதில் மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு, மோர் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். திக்கான பதம் வந்ததும் இதில் பாதியளவு வெண்ணெய் தடவி மற்றும் பாதாம் கலவை தூவி வைத்துள்ள டிரேயில் பாதியளவு மாவினை சேர்க்கவும். அதன் மேல் மீதமுள்ள பாதாம் வெல்லக்கலவையை சேர்த்து அதன் மேல் மீதமுள்ள கேக் மாவு கலவையை சேர்த்து சமன் படுத்தவும். மைக்ரோவேவ் அவனை 180 டிகிரியில் பிரீ ஹீட் செய்து, அதில் கேக் டிரேயை வைத்து நாற்பது நிமிடம் வேகவைக்கவும். பல்குத்தும் குச்சியினை கொண்டு உள்ளே குத்திப் பார்த்தால், குச்சியில் மாவு ஒட்டாமல் வரவேண்டும். அவ்வாறு வரவில்லை என்றால், மீண்டும் பத்து நிமிடம் வேகவைக்கவும். பிறகு ஆறவைத்து துண்டுகளாக பரிமாறவும்.

Related posts

மதுரை ஏர்போர்ட் இன்றுமுதல் 24 மணி நேரமும் செயல்படும்: விமான நிலைய இயக்குநர் தகவல்

ஏகனாபுரம் கிராமத்தில் 445 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு

குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம் கணவனை சம்மட்டியால் தாக்கிய மனைவி