பாண்டேஸ்வரம் கிராமத்தில் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

ஆவடி: ஆவடி அடுத்த பாண்டேஸ்வரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இது திருவள்ளூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பெருமாள் கோயிலில் ஒன்றாகும். இந்த கோயிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி, நேற்று காலை 7 மணியளவில் முதல் கால யாகசாலை பூஜையும், அதன் பின்பு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது. பின்னர், காலை 9.30 மணியளவில் யாக சாலையில் இருந்து கும்பம் புறப்பட்டு கோயிலை வலம் வந்தது. பின்னர், காலை 10 மணியளவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் உற்சவரான ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாளை  வழிபட்டனர். பின்னர் பண்டரி பூஜை நடைபெற்றது. பிற்பகல் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதன் பிறகு, மாலை திருக்கல்யாண உற்சவமும், பின்னர் சுவாமிக்கு ஊஞ்சல் சேவையும் நடைபெற்றது. இரவு சுவாமி திருவீதி புறப்பாடு சிறப்பாக நடந்தது. முன்னதாக இரண்டு நாட்களாக பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிராம தலைவர் வி.முரளி தலைமையில் பொதுமக்கள் செய்து இருந்தனர்.பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே புண்ணியம் கிராமத்தில் வரசித்தி விநாயகர் கோயிலில் கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் உதவியுடன்  கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாட்கள் மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. இதனையொட்டி, கோயில் முழுவதும் மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. கோயில் வளாகத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு ரமேஷ் குருக்கள் தலைமையில் நித்திய ஹோம குண்ட பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை மகாசங்கல்பம், பூர்ணாஹூதி பூஜைகள் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க புனித நீர் கலசங்களை புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து, கோயில் கோபுர கலசத்திற்கு மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டு புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அப்போது, கோயில் சுற்றி கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து, மூலவர் வரசித்தி விநாயகர் சிறப்பு அபிஷேக தீபாராதனை பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.   …

Related posts

ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

மெரினாவில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியை ஒட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை