பாணாவரம் அருகே விவசாயிகள் மகிழ்ச்சி மகேந்திரவாடி ஏரி கடை வாசல் சென்றது-850 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்

பாணாவரம் : பாணாவரம் அருகே உள்ள மகேந்திரவாடி ஏரி கடை வாசல் சென்றதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் அப்பகுதியில் உள்ள 850 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் எனக் கூறப்படுகிறது.ராணிப்பேட்டை மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில், தொடர் கனமழை பெய்து ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றன. இந்நிலையில், பாணாவரம் அடுத்த மகேந்திரவாடி ஏரி  800 ஏக்கர் பரப்பளவு கொண்டது. வாலாஜா அணைக்கட்டு பகுதியில் இருந்து மகேந்திரவாடி கால்வாய்க்கு வரும் நீர் மற்றும் காவேரிப்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீர் கோவிந்தச்சேரி, மங்கலம் ஏரிகளை நிரப்பி, பின்னர் புதூர், கூத்தம்பாக்கம் சிற்றோடை வழியாக மகேந்திரவாடி ஏரிக்கு வருகிறது. தற்போது மகேந்திரவாடி ஏரி, 183 கன அடி நீர் நிரம்பி கடைவாசல் சென்றது. இந்த ஏரி பாசனத்தில் மகேந்திரவாடி, கோடம்பாக்கம், கல்வாடி, வெளிதாங்கிபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள  850க்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், இங்கிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் பாலேரி, பாலகிருஷ்ணாபுரம், மேலேரி, கீழ்வீதி, பெரப்பேரி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி வருகின்றன.இதனால் இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து, விவசாயப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மகேந்திரவாடி ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் தினமும் கூட்டம், கூட்டமாக வந்து குளித்து,  பொழுதுபோக்கி செல்வதால்,  இப்பகுதி சுற்றுலாத்தலம் போல் காட்சி அளிக்கிறது.நீர்நிலைகளில் சிறுவர்கள்மகேந்திரவாடி ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து கடைவாசல் செல்வதால், நீர்நிலைகளில் குளிக்கவும், பொழுது போக்கவும் வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தண்ணீர் வேகமாக வெளியேறும் கடை வாசல் பகுதியில் சிலர், உற்சாக மிகுதியால், சிறுவர்களை நீர்நிலைகளுக்கு அழைத்து வந்து விளையாட வைக்கின்றனர். வெள்ள நீர் அதிகரித்து வரும் வேளையில், இதுபோன்ற ஆபத்தான செயல்களில் பொதுமக்கள் ஈடுபடாமல் இருக்கவும், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கவும்,  பொதுப்பணித்துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, காவல் துறை மூலம் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்