பாடாலூர் அருகே நாரணமங்கலம் மண்டபத்து அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

பாடாலூர், மே 5: பாடாலூர் அருகே நாரணமங்கலம் கிராமத்தில்  மண்டபத்து அய்யனார் முத்துசாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள அருள்மிகு மண்டபத்து அய்யனார் மற்றும் முத்துசாமி கோயில் பரிவார தெய்வங்களின் மஹா கும்பாபிஷேகம் விழா நேற்று நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள மண்டபத்து அய்யனார் மற்றும் முத்துசாமி பரிவார தெய்வங்களின் கோயில்கள் புனரமைக்கப்பட்டு மஹா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு புதன்கிழமை மாலை மங்கள இசை, விநாயகர் வழிபாடு, சங்கரணம், புண்யாஹவாசகம் பூஜைகளோடு யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து ஐந்து கரத்தான் வழிபாடு, வாஸ்து சாந்தி, கடஸ்தாபனம் பூஜைகளோடு யாகவேள்வி நடைபெற்றது. யாக வேள்வியில் பல்வேறு மூலிகை பொருட்கள் செலுத்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. நேற்று காலை கடங்கள் புறப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு சுவாமி சிலைகளுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.

விழாவில் நாரணமங்கலம், மருதடி, விஜயகோபாலபுரம், காரை, புதுக்குறிச்சி, வரகுபாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை நாரணமங்கலம் கிராம பொதுமக்கள் மற்றும் குடிபாட்டு மக்கள் செய்திருந்தனர்.பாடாலூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை