பாடாலூர் அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்

பாடாலூர்,செப்.6: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் பாடாலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி, மாவட்ட கல்வி அலுவலர் அண்ணாதுரை, மாவட்ட உதவி திட்ட அலுவலர்கள் ஜெய்சங்கர், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வட்டார வள மைய மேற்பார்வையாளர் வஹிதா பானு வரவேற்றார். மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாமில் 0 முதல் 18 வயதுடைய 55 மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளும், 74 மாற்றுத்திறன் கொண்ட பெரியவர்களும் கலந்து கொண்டனர். இதில் 25 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. 4 மாற்றுத்திறனாளிகளுக்கு மறு மதிப்பீடு செய்யப்பட்டது. சிபிசேர் ஒருவருக்கும், சக்கர நாற்காலி 3 பேருக்கும், நடைபயிற்சி வண்டி ஒருவருக்கும் வழங்க தேர்வு செய்யப்பட்டனர். மருத்துவ முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளி மாணவர்களை மனநல மருத்துவர் வினோத், எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர் தணிகாசலம், காது மூக்கு தொண்டை மருத்துவர் சிவகுமார், கண் மருத்துவர் பிரியா, குழந்தைகள் நல மருத்துவர் பத்மஜோதி ஆகியோர் பரிசோதித்து தேசிய அடையாள அட்டை மற்றும் உதவி உபகரணங்களுக்கு பரிந்துரை செய்தனர்.

இந்நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர்கள் வினோத்குமார், சின்னசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் மாலதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரதிதாசன், வட்டார ஒருங்கிணைப்பாளர் பரிமளா, ஆசிரியர் பயிற்றுநர் ஆனந்த், இளங்கோவன், தலைமலை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பணியாளர்கள், நான்கு வட்டாரங்களை சேர்ந்த ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சிறப்பு பயிற்றுநர்கள் முட நீக்கியல் வல்லுனர்கள், ஆயத்த பயிற்சி மைய ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை