பாடநூல் தயாரிக்கும் நிறுவன கட்டிடம் திறப்பு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்

செங்கல்பட்டு: மறைமலைநகரில் பாடநூல் தயாரிக்கும் கட்டிடத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் பாடநூல் தயாரிக்கும் தனியார் நிறுவன கட்டட திறப்பு விழா மற்றும் 50வது ஆண்டு பொன்விழா நேற்று நடந்தது. இதில் தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாநில சிறுபான்மையினர் நல ஆணைய  தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி, புதிய கட்டிடத்தை திறந்து வைத்தனர். தொடர்ந்து, திண்டுக்கல் ஐ. லியோனி அச்சு இயந்திரத்தை இயக்கி வைத்தார்‌. நிகழ்வில், மறைமலைநகர் திமுக நகர செயலாளர் ஜெ.சண்முகம், துணை செயலாளர் சீனுவாசன், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுந்தரமூர்த்தி உள்பட திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்….

Related posts

பல மணி நேரம் நிற்க வேண்டிய அவசியமில்லை; கைதிகளை பார்க்கணுமா? இனி அப்பாயின்ட்மென்ட் புழலை தொடர்ந்து அனைத்து சிறைகளிலும் விரைவில் அறிமுகம்

தூத்துக்குடி – மாலத்தீவு இடையே அக்.1 முதல் சரக்கு தோணி இயக்கம்

திரைப்பட இயக்குனர் மோகன் ஜி மீது மேலும் இரு வழக்கு