பாடகர் மூஸ்சேவாலா படுகொலை நீதிமன்றத்தில் 1,850 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்: 36 பேர் குற்றவாளியாக சேர்ப்பு

அமிர்தசரஸ்: பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்சேவாலா படுகொலை வழக்கில் போலீசார் 1,850 பக்க குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். பஞ்சாப்பை சேர்ந்த புகழ் பெற்ற பாடகர் சித்து மூஸ்சேவாலா, கடந்த மே 29ம் தேதி நண்பர்களுடன் காரில் சென்றபோது ஒரு கும்பலால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இதில், டெல்லி சிறையில் உள்ள தாதா கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய், கனடாவில் இருந்து இயங்கும் கோல்டி பிரார் கும்பலின் தலைவனுக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொலை தொடர்பாக 36 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில், 20 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்கள் தலைமறைவாக உள்ளனர். மான்சாவில் உள்ள நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது. இதில், 36 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், 24 பேர் மீது 1,850 பக்க குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்துள்ளனர். மற்ற 12 பேர் மீது விரைவில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என அவர்கள் தெரிவித்தனர்….

Related posts

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

திருப்பதி அருகே செம்மரக்கட்டை பறிமுதல்; 4 பேர் கைது

பெலிக்ஸ் ஜெரால்டு வழக்கு விவகாரம்: ஐகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம்கோர்ட் தடை