பாஜ பிரமுகர்களுக்கு எதிரான வழக்கு ரத்து ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சமூக வலைதளங்களில் ஆளும் திமுகவுக்கு எதிராக அவதூறு பரப்பிய வழக்கில் யூ டியூபர் மாரிதாசை கைது செய்ய சென்ற மதுரை தல்லாக்குளம் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததுடன் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக முன்னாள் எம்.எல்.ஏ.வும், தற்போதைய பா.ஜ. மதுரை மாநகர் மாவட்ட செயலாளருமான சரவணன் உள்பட 34 பேருக்கு எதிராக தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் எம்.எல்.ஏ. சரவணன் உள்பட 34 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு, நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல் துறையினர்,போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் வழக்கை ரத்து செய்யக் கூடாது என காவல் துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, முன்னாள் எம்.எல்.ஏ. சரவணன் உள்ளிட்டோர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்….

Related posts

மாநில கல்லூரியில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு லிப்ட் வசதியுடன் பிரத்யேக விடுதி: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

சென்னையில் வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி: பேரிடர் மேலாண்மை துறை திட்டம்

தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்: இ.கருணாநிதி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்