பாஜ தொண்டர் கட்டிய கோயிலில் பிரதமர் மோடியின் சிலை திடீர் அகற்றம்

புனே: மகாராஷ்டிரா மாநிலம், புனேவின் அன்த் பகுதியை சேர்ந்தவர் மயூர் முண்டே. பாஜ தொண்டரான இவர், தனது வீட்டின் வளாகத்தில் சிறிய கோயில் ஒன்றை அமைத்தார். அதில், ஜெய்ப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட சிகப்பு நிற பளிங்கு கற்களால் பிரதமர் மோடியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டது.இந்நிலையில், கோயிலில் இருந்து மோடியின் சிலை திடீரென நேற்று அகற்றப்பட்டது. அதற்கான காரணம் தெரியவில்லை.  எனினும், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலர், இந்த கோயில் முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இது தொடர்பாக அக்கட்சியின் புனே நகர தலைவர் பிரசாந்த் ஜக்தாப் கூறுகையில், ‘‘மோடிக்கு கோயில் கட்டிய பிறகு பெட்ரோல், டீசல் விலை குறையும், பணவீக்கம் குறையும், மக்களின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் பெறுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், கோயிலில் கடவுளை காணவில்லை,’’ என்றார் கிண்டலாக….

Related posts

ஜிகா வைரஸ் பரவல்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை

உத்தரப் பிரதேசத்தில் ஆன்மீக சொற்பொழிவு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 134 ஆக அதிகரிப்பு!!

மணிப்பூரில் தொடரும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுகிறது: பிரதமர் மோடி உரை