பாஜ ஆளும் மாநிலங்களில் மறைக்கப்படும் கொரோனா பலி

லக்னோ: கொரோனா 2வது அலையில் பலியாவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், பல மாநிலங்களில் மயானங்களில் சடலங்களை எரிக்க உறவினர்கள் வாகனங்கள் வரிசையாக காத்திருக்கும் வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், பாஜ ஆளும் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பலி அதிகளவில் மறைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் கடந்த ஒரு வாரத்தில் 124 பேர் கொரோனாவுக்கு இறந்ததாக அரசு கணக்கு காட்டி உள்ளது. அதே ஒரு வாரத்தில் மயானங்களில் எரிக்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 400க்கும் அதிகமாக உள்ளது. எனவே, 275 சடலங்கள் அரசு பதிவேட்டில் இருந்து விடுபட்டிருப்பது எப்படி என்பது கேள்வியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து லக்னோ அரசு உயர் அதிகாரி அமித் சிங் என்பவர் கூறுகையில், ‘‘நான் கொரோனா மரணங்கள் குறித்த கணக்குகளை மட்டுமே பராமரிக்கிறேன். மற்ற மரணங்கள் பிற காரணங்களால் நிகழ்ந்தவையாக இருக்கலாம். அதைப் பற்றி எனக்கு தெரியாது,’’ என்கிறார். இதே போல், மத்திய பிரதேசத்திலும் மயானங்களில் மக்கள் சடலங்களுடன் காத்திருக்கும் நிலையில் மாநில அரசுகள் பெரிய அளவில் பலி எண்ணிக்கையை காட்டுவதில்லை. போபாலில் அரசு மருத்துவ அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பலியை மறைப்பதால் எங்களுக்கு என்ன விருதா தரப்போகிறார்கள்,’’ என அலட்சியமாக கூறி உள்ளார். குஜராத்திலும் கொரோனாவால் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதை மாநில அரசு மறைப்பாக அம்மாநில உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், இந்த பலி மறைப்பு சம்பவங்கள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்….

Related posts

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்து சஸ்பென்ட் ஆன சிஐஎஸ்எப் காவலர் பெங்களூருவுக்கு பணியிட மாற்றம்