தர்மபுரி, டிச.9: 3 மாநில தேர்தலில் பாஜ வெற்றி குறித்து, தர்மபுரி எம்.பி. கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போலீசாரின் தடையை மீறி நடைபெற்ற இப்போராட்டத்திற்கு, பாஜ மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர்கள் ஐஸ்வர்யா முருகன், வெங்கட்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, 46 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
பாஜ ஆர்ப்பாட்டம் ; 46 பேர் கைது
previous post