பாஜ அலுவலகம் மீது குண்டு வீச்சுக்கு அதிமுக கண்டனம்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை, தி.நகரில் உள்ள தமிழக பாஜ அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது. உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய கடமை தமிழ்நாடு அரசுக்கு உண்டு. பாஜ அலுவலகம் மீதான பெட்ரோல் குண்டு வீச்சிற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என முதல்வரை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். அதிமுக வேட்பாளர் தற்கொலை தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை காவல் துறை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். தேர்தல் ஆணையரும், காவல் துறையும் உரிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்….

Related posts

தன்னை சந்திக்க சென்னைக்கு வர வேண்டாம்: உதயநிதி

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சிதாராமன் ராஜினாமா செய்ய வேண்டும்: காங். மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்

த.வெ.க. கொடி விவகாரத்தில் தலையிட முடியாது: தேர்தல் ஆணையம்