பாஜவின் சின்னவீடு அதிமுக; ஈவிகேஎஸ்.இளங்கோவன் கிண்டல்

ஈரோடு: பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இல்லை என்றாலும் அக்கட்சிக்கு அதிமுக சின்ன வீடாக இருந்து வருகிறது என ஈரோட்டில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் தெரிவித்தார். ஈரோட்டில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கோடநாட்டில் நடந்த கொலை, கொள்ளையில் பழனிசாமியின் பங்கு பெரும் பங்கு என்பது விசாரணைக்கு பிறகு முழுமையாக வெளிவரும். நீதிமன்றத்தில் தண்டிக்கப்படுபவர்களில் முதன்மையானவராக எடப்பாடி பழனிசாமி இருக்கப்போகிறார்.எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கும்போதே அவர் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டினை சொல்லியுள்ளேன். அநேகமாக தேர்தலில் பரப்புரையாற்றுகின்ற எடப்பாடி பழனிசாமிக்கு இதுதான் கடைசி பரப்புரையாக இருக்கும் என்று நினைக்கிறேன். பாரதிய ஜனதா கட்சி இன்றைக்கு அதிமுக கூட்டணியில் இல்லை என்று சொன்னாலும்கூட அதிமுக முழுக்க முழுக்க பாஜவின் அடிமையாக, சின்ன வீடாக இருப்பதை யாரும் மறுத்து விட முடியாது. சுயமரியாதை, பகுத்தறிவு, சமூகநீதியை பற்றியே பேசுகின்ற தார்மீக உரிமையை அதிமுக இழந்து விட்டது. அதிமுகவினர் இன்றைக்கு பெரியாரையும், அண்ணாவையும், எம்ஜிஆரையும் மறந்து விட்டார்கள். இன்னும் சில நாட்களில் ஜெயலலிதாவையும் மறந்து விடுவார்கள். கடைசியில் தமிழக மக்கள் முழுமையாக அதிமுகவை மறந்து விடுவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

கேபினட் குழுக்களை அறிவித்தது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு

பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!!

உ.பி. ஹத்ராஸ் சம்பவம்: பாஜக அரசின் காவல்துறையின் அலட்சியப்போக்கே காரணம்: செல்வப்பெருந்தகை