பாஜக எம்எல்ஏக்களுக்கு மிரட்டல்

 

புதுச்சேரி, ஜூலை 24: பாஜக எம்எல்ஏக்களுக்கு மர்ம நபர் மிரட்டல் விடுத்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் கல்யாணசுந்தரம், நேற்று காலை வழக்கம்போல் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது எம்எல்ஏவுக்கு போன் செய்த மர்ம நபர், முன்னாள் அமைச்சர், எம்எல்ஏ கல்யாணசுந்தரம்தானே, எனக்கேட்டு சகட்டு மேனிக்கு வசைபாடியிருக்கிறார். என்னப்பா? யார் வேண்டும் எனக்கேட்டபோது, உங்களுக்கு பதில் சொல்ல முடியாது. என்னை ஏதும் உங்களால் செய்ய முடியாது, பாக்குறீங்களா? எனக்கூறி மிரட்டல் விடுத்துள்ளார்.

என் தொலைபேசி எண் உங்களுக்கு எப்படி கிடைத்தது எனக்கேட்டபோது, காரைக்காலில் ஒருவரிடமிருந்து வாங்கினேன். இப்போது என்ன வேண்டும் எனக்கேட்டபோது, என்னிடம் வைத்துக்கொள்ளாதீர்கள் எனக்கூறி போனை துண்டித்துவிட்டார். ஏதோ குடிகாரன் பேசுவதாக நினைத்துக்கொண்ட எம்எல்ஏ, இதனை பெரிது படுத்தவில்லை. இதற்கிடையே திருபுவனை தொகுதி பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ அங்காளனுக்கு நேற்று மாலை சொல்போனில் பேசிய மர்ம நபர், என்னிடம் மோத வேண்டாம், நீங்கள் முன்னாள் அமைச்சரா? இருந்த என்கிட்ட வச்சுக்காதீங்க எனக்கூறி சகட்டு மேனிக்கு வசைபாடியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அங்காளன், திருக்கனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். விசாரணையில் கல்யாணசுந்தரம் எம்எல்ஏ மற்றும் அங்காளன் எம்எல்ஏ இருவரையும் தொலைபேசியில் மிரட்டியது, ஒரே நபர் என்றும், ஒரே எண்ணை பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதனால் உஷாரான போலீசார், காரைக்கால் மாவட்ட போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். எண்னை வைத்து விசாரணை நடத்தியதில் நாகப்பட்டினம் அடுத்த செம்பியன்மகாதேவி கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவரை கைது செய்ய காரைக்கால் போலீசார் நாகப்பட்டினம் விரைந்துள்ளனர்.

அங்கு சென்ற போலீசார், அவரை பிடித்து காரைக்கால் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். எதற்காக? எம்எல்ஏவுக்கு மிரட்டல் விடுத்தார். யார்? இதன் பின்னணியில் உள்ளார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாஜக எம்எல்ஏக்களுக்கு மர்ம நபர் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது