பாஜகவின் நல்லாட்சி செயல்திட்டம்: அசாம் மாநிலத்தில் பாஜக அரசு இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கும்: பிரதமர் மோடி பேச்சு..!

குவகாத்தி: அசாம் மாநிலத்தில் பாஜக அரசு இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கும், என்டிஏ ஆட்சி அமையும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அசாம் சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட 40 பேர் நட்சத்திர பேச்சாளர்களாக தேர்வு செய்யப்பட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, முக்தார் அப்பாஸ் நக்வி, பிஹார் அமைச்சர் சையது ஷானவாஸ் ஹூசைன் ஆகியோரும் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கு பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: எனது சகோதர-சகோதரிகளுடன் இன்று இருப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன். நாட்டில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என மாநிலம் முழுவதும் விரும்புகிறது. மேலும், பாஜகவின்  நல்லாட்சி செயல்திட்டம் மக்களுக்கு நாட்டத்தை கொடுத்திருக்கிறது. மத்தியிலும், அசாமிலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, இரட்டை அலட்சியம் மற்றும் இரட்டை ஊழல் இருந்தது.  காங்கிரஸ் என்றால் உறுதியற்ற தன்மை, ஊழல் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். எந்தவொரு நன்மையும் செய்ய அவர்களுக்கு எந்த நோக்கமும் இல்லை.  மத்தியிலும், மாநிலத்திலும் என்.டி.ஏ அரசாங்கம்; இந்த இரட்டை எஞ்சின் சக்தி அசாமை முன்னோக்கி கொண்டுச் செல்கிறது எனவும் கூறினார்….

Related posts

விக்கிரவாண்டியில் இன்றுடன் பரப்புரை ஓய்கிறது

ஐதராபாத்தில் குழந்தைகளுக்கு தாமரை சின்னம்; தேர்தல் பிரசார விதிமீறிய வழக்கில் அமித்ஷா, கிஷன் ரெட்டி பெயர்கள் நீக்கம்

நாட்டுக்காக சாக தேவையில்லை வளர்ச்சிக்கு பணியாற்றுங்கள்: குஜராத் விழாவில் அமித் ஷா பேச்சு