பாஜகவினர் கொங்குநாடு சர்ச்சையை கிளப்பி வரும் நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் ஜெய் தமிழ்நாடு என ஆளுநர் உரை!!

சென்னை : பாஜகவினர் கொங்குநாடு சர்ச்சையை கிளப்பி வரும் நிலையில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஜெய் தமிழ்நாடு என பேசி முடித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தண்டலம் கிராமத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் கிராமப்புற மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு ஆளுநர் புரோஹித் ரிப்பன் அகற்றி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள கொரோனா நோய் தடுப்பு நெறிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் முகக்கவசம் அணிதல், சானிடைசர் பயன்பாடு, தனிமனித இடைவெளியை கடைபிடித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியின் முடிவில், நன்றி, வைக்கம் என தமிழில் பேசி, பின்னர் ஜெய் ஹிந்த் எனவும் ஜெய் தமிழ்நாடு எனவும் கூறி ஆளுநர் புரோஹித் தமது உரையை முடித்துக் கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் நாசர், கும்முடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்த ராஜன், மாவட்ட ஆட்சியர் ஜான் வர்கீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை