பாசனத்திற்கு தண்ணீர் இன்றி தென்கரை, கட்டளை வாய்க்கால் விவசாயிகள் பாதிப்பு: வேளாண் ஆணையரிடம் எம்எல்ஏ மாணிக்கம் மனு

குளித்தலை, நவ.18: தென்கரை வாய்க்கால் மற்றும் கட்டளை வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குளித்தலை தொகுதி எம்எல்ஏ மாணிக்கம் வேளாண் அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தார். குளித்தலை சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ மாணிக்கம் தமிழ்நாடு வேளாண்மை ஆணையர் சுப்பிரமணியனிடம் நேரில் அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது: விதைக்க இயலாத சூழ்நிலையில் கடந்த காலங்களில் ரூ.375 செலுத்தி பயிர் காப்பீடு செய்யப்பட்டு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 6000 இழப்பீடு தொகை விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனம் மூலம் வழங்கப்பட்டது என தெரிய வருகிறது.

மேலும் காவிரியில் தண்ணீர் இல்லாததால் போதிய பாசன வசதி பெற இயலாமல் குளித்தலை தொகுதிக்குட்பட்ட தென்கரை வாய்க்கால் மற்றும் கட்டளை வாய்க்கால் பகுதிகளில் நஞ்சை சாகுபடி செய்து வரும் விவசாயிகள் இந்த ஆண்டும் விதைக்க இயலாத சூழ்நிலையில் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். ஆகவே கடந்த காலங்களில் வழங்கியது போல் கரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்படும் வகையில் விவசாய பயிர் காப்பீடு திட்டத்தில் பயன்பெற ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்