பாக்கு மரங்களில் மாகாளி நோய் தாக்குதலை போடோ கலவை தெளித்து கட்டுப்படுத்தலாம்-தோட்டக்கலை துறை தகவல்

கூடலூர் : பாக்கு மரங்களில் ஏற்படும் மாகாளி நோய் தாக்குதலை போடோ கலவை தெளித்து கட்டுப்படுத்தலாம் என தோட்டக்கலை துறையினர் தெரிவித்துள்ளனர்.கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் பாக்கு மரங்களில் மாகாளி நோய் தாக்குதல் மற்றும் இஞ்சி அழுகல் நோய் பரவலாகக் காணப்படுவதால் கூடலூர் தோட்டக்கலைத் துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ், பாடந்துறை மற்றும் அள்ளூர் பகுதிகளில் வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகள் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நோய்களை கட்டுப்படுத்தும் முறை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.பாக்கு மரங்களில் மாகாளி நோயை கட்டுப்படுத்த நோய்த் தாக்குதலுக்கு உள்ளான குலைகளை அகற்றுதல், கீழே விழுந்த பாக்குகளை அகற்றுதல், போடோ கலவை தெளித்தல், அதன் அளவு முறைகள் குறித்தும், போடோ கலவை தயாரிப்பு முறை குறித்தும் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. உயிரியல் கட்டுப்படுத்தும் காரணியான பேசிலெஸ் சப்டிலிஸ் நுண்ணுயிர் மருந்து தெளிக்கும் முறைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.ஆய்வில் ஊட்டி தோட்டக்கலை துணை இயக்குநர் சிபிலா மேரி தலைமயில், கூடலூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெயலட்சுமி, உதகை தோட்டக்கலை நிலைய உதவிப் பேராசிரியர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்….

Related posts

திருப்பூர் அருகே விபத்து; சென்னை சிறுவன் பலி: 7 பேர் படுகாயம்

குட்கா முறைகேடு வழக்கு: மாஜி அமைச்சர்கள், டிஜிபிக்கள் நீதிமன்றத்தில் ஆஜர்; விசாரணை 23ம் தேதிக்கு தள்ளிவைப்பு

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே சஞ்சய் என்ற 3 வயது சிறுவன் கொலை..!!