பாகிஸ்தான் 217 ரன்னில் ஆல் அவுட்: வெ.இண்டீசுக்கு 2 ரன்னில் 2 விக்கெட் காலி

கிங்ஸ்டன்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 4 டி20 போட்டி, 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரில் 3 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் ஒரு போட்டியில் பாகிஸ்தான் வென்று தொடரை கைப்பற்றியது. தொடர்ந்து 2 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் கிங்ஸ்டனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ்  பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 70.3 ஓவரில் 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக பஹாத் ஆலம் 56, பஹீம் அஷ்ரப் 44, கேப்டன் பாபர் அசாம் 30 ரன் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில், ஜேசன் ஹோல்டர், ஜேடன் சீல்ஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில்  நேற்றைய ஆட்ட நேர முடிவில் 4 ஓவரில் 2 விக்கெட்  இழப்பிற்கு 2 ரன் எடுத்திருந்தது. கிரேன் பாவல், பொன்னர், பாகிஸ்தானின் முகமது அப்பாசின் அடுத்தடுத்த பந்தில் டக்அவுட் ஆகினர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது. …

Related posts

2024 டி20 உலக கோப்பை சாம்பியனான இந்திய அணிக்கு ‘தல’ தோனி வாழ்த்து!

ஐசிசி உலக கோப்பை டி20 பைனல்: கடைசி ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி; 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி அசத்தல்

சில்லி பாயின்ட்…