பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகளின் ₹465 கோடி நிதி தடுப்பு: அமெரிக்கா அறிக்கை

வாஷிங்டன்:  பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளின் ₹465 கோடி நிதி தடுக்கப்பட்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் வெளிநாட்டு சொத்து கட்டுப்பாடு கருவூல அலுவலகம் சர்வதேச தீவிரவாத அமைப்புகள் மற்றும் தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளின் சொத்துக்கள் மீது தடை விதித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இத்தகைய தடைகளின் மூலம் தீவிரவாத அமைப்புகளுக்கு செல்ல வேண்டிய நிதி தடுக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2019ம் ஆண்டில், தீவிரவாத அமைப்புகளுக்கு செல்ல வேண்டிய ₹465 கோடி நிதி தடுக்கப்பட்டுள்ளதாக கருவூலத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.இதில், பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் ரூ.25 கோடி நிதியும், ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் ரூ.1.27 லட்சம் நிதியும் தடுக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் செயல்படும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹஸ்புல் முஜாகின் அமைப்பின் ₹3.20 லட்சம் நிதியும், ஹர்கத் உல் முஜாகிதீன் அல் இஸ்லாமி அமைப்பின்₹34 லட்சம் நிதியும் தடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுபோல மொத்தம் 70 தீவிரவாத அமைப்புகளின் நிதி துடக்கப்பட்டுள்ளது.  அதிகபட்சமாக அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் ₹28 கோடி நிதி தடுக்கப்பட்டுள்ளது….

Related posts

அமெரிக்க அதிபர் தேர்தல்; கமலா ஹாரிசுக்கு பெருகும் ஆதரவு

பாரீஸ் ஒலிம்பிக்: 28 பேர் கொண்ட இந்திய தடகள அணி வீரர்கள் பட்டியல் அறிவிப்பு..!!

அதிபர் பைடனை பழைய குப்பை என்று கிண்டல்: முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பேசும் வீடியோவால் சர்ச்சை